சத்தமே இல்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த நடிகை சுனைனா… வைரலாகும் போட்டோ…!

Author: Vignesh
8 June 2024, 10:15 am

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் சுனைனா. இந்த படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே பெரிதும் ரசிக்கப்பட்டது. இந்த படத்தின் பாடல் வரிகள் தற்போதும், பலரின் ப்ளேலிஸ்டில் உள்ளது. இதை அடுத்து, அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தது.

sunaina - updatenews360

மேலும் படிக்க: கோடிக்கணக்கில் சம்பாதிச்சும் செந்தில் அதுல வீக்கா?.. சீக்ரெட் சொன்ன மனைவி..!

அதன் பிறகு மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர். ஏதோ சன் பிக்சர்ஸ் புண்ணியத்தில் அந்த படம் ஓரளவுக்கு சுமாராக ஓடியது. ஆனால், அந்த படங்களை அடுத்து, சுவைனாவுக்கும் நகுலுக்கும் சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. சீல்லு கருப்பட்டி திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், இவர் பல வெப் சீரியல்களிலும் நடித்துள்ளார். அவ்வப்போது, புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார்.

sunaina - updatenews360

மேலும் படிக்க: சொகுசு கப்பலில் பேச்சிலர் பார்ட்டி.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமணம் எங்கே, எப்போது நடக்கப் போகுது தெரியுமா?..

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேல் சுனைனா தமிழ் சினிமாவில் நடித்தும் இதுவரை முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியாமல் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், 35 வயதாகும் சுனைனா சில நாட்களுக்கு முன்னர் அவரது காதலர் கையை பிடித்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருந்தார். தற்போது, தனக்கு நிச்சயம் முடிந்து விட்டதாக கூறி வருங்கால கணவருடன் மோதிரம் மாற்றிக் கொண்டு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…