அண்ணாமலை கண்ட கனவு பலிக்கல.. பாவம் அந்த விரக்தியில் எங்களை பேசறாரு : இபிஎஸ் கடும் தாக்கு!

Author: Udayachandran RadhaKrishnan
8 June 2024, 2:11 pm

சேலம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து இருக்கிறது. இந்த தேர்தல் குறித்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பல விமர்சனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில் உங்களை நான் சந்தித்து பேசுகிறேன்.

தேர்தல் பிரசாரத்தை பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்த நான் ஒருவர் மட்டும் தான் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் செய்தேன். அதுபோல் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அ.தி.மு.க. கூட்டணி பலம் இல்லை, தி.மு.க கூட்டணி பலத்தில் போட்டியிடுகிறது என விமர்சனம் செய்கிறார்கள். அ.தி.மு.க. இந்த தேர்தலில் 2019 பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 1 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்றி இருக்கிறோம். இது அ.தி.மு.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறோம்.

அ.தி.மு.க. ஓட்டுக்கள் எதிர்கட்சிக்கு சென்று விட்டது என சொல்கிறார்கள். அ.தி.மு.க. ஓட்டு எங்கும் போகவில்லை. எங்களுக்குதான் தான் கிடைத்து இருக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தான் கூடுதல் வாக்குகள் பெற்று இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அமோக வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்கும்.

பா.ஜ.க. கூட்டணி இருந்திருந்தால் வெற்றி கிடைத்து இருக்குமா என செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணி இருந்திருந்தால், போயிருந்தால், அதை பற்றி எல்லாம் கவலை இல்லை.

2014, 2019, 2024-ல் கூட்டணி மாறி மாறி அமைப்பாங்க. அந்தந்த தேர்தலில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கட்சி கூட்டணி அமையும். 1992-ல் தி.மு.க. 2 இடங்களில் வெற்றி பெற்றது.

1996-ல் அ.தி.மு.க. 4 இடங்களில் வெற்றி பெற்றது. ஆகவே தி.மு.க. அழிந்து போச்சா, அ.தி.மு.க. அழிந்து போச்சா அதெல்லாம் கிடையாது. தி.மு.க. கடந்த காலங்களில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. எனவே மாறி மாறி தான் ஆட்சிக்கு வருவாங்க.

மேலும் படிக்க: கொண்டாட்டத்தை நிறுத்துங்க… கட்சியினருக்கு காங்கிரஸ் திடீர் அட்வைஸ் : கொந்தளித்த கார்கே!

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க. கூட்டணி விலகி விட்டது. அண்ணாமலையின் கனவு இந்த தேர்தலில் நனவாகவில்லை. அந்த விரக்தியில் அவர் பேசுகிறார். பா.ஜ.க.வுக்கு தனிப்பெருபான்மை கிடைக்காததற்கு தமிழ்நாட்டில் அந்த கட்சியில் உள்ள தலைவர்களை போல் பல தலைவர்கள் இருப்பார்கள். அதனால் தான் அந்த கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது என கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 304

    0

    0