மோடியின் செங்கோல் நாடகம்… தமிழக மக்கள் கொடுத்த தரமான பதில் : காங்கிரஸ் சரமாரி விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan9 June 2024, 3:43 pm
மக்களவைத் தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இன்று இரவு 7.15 மணிக்கு மோடி 3 வது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன் முக்கிய இலாக்காக்களை உள்ளடக்கிய 30 அமைச்சர்கள் முதற்கட்டமாக பதவியேற்க உள்ளனர். கடந்த தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் யாரையும் எதிர்பார்க்காமல் ஆட்சியமைத்த பாஜக இந்த முறை ஆர்.ஜே.டி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் தயவை எதிர்நோக்கியுள்ளது.
இந்த பாராளுமன்ற தேர்தலில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் தான் பாஜக ஒரு இடங்களில் வெல்லவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெறாதது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “மே 28, 2023 நினைவிருக்கிறதா? செங்கோலுடன் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்த நாள். செங்கோல் என்பது தமிழர் வரலாற்றின் மதிப்பிற்குரிய அடையாளமாக உள்ளது, ஆனால் தமிழ் வாக்காளர்களும் உண்மையில் இந்தியாவின் வாக்காளர்களும் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர்.
மேலும் படிக்க: விரிவடையும் த.வெ.க… 2026 தான் இலக்கு.. விஜய் கட்சி வெற்றி பெறும் : புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை..!!
கடந்த பத்தாண்டுகளில் அவர் அத்துமீறிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.