ஷகிலா கூறிய அந்த வார்த்தை.. அவசர அவசரமாக நிச்சயதார்த்தத்தை முடித்த பயில்வான்..!
Author: Vignesh10 June 2024, 9:51 am
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக வலம் வருபவர் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாத்துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படையாக சொல்லி வம்பில் மாட்டிக்கொள்வது இவரது வழக்கமாகும். இது பெரிய தொழிலாகவே அவர் செய்து வருகிறார். இதற்காக பல யூடியூப் சேனல்கள் அவருக்கு ஒரு நல்ல தொகை கொடுத்து நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து பேச வைக்கிறார்கள். அதை ரசிக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. அப்படி அவர் பேசும் விஷயங்களுக்கு வரும் சர்ச்சைகளையும் தைரியமாகவே எதிர்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க: பாத்ரூமில் போட்டோ எடுக்குறது தான் இப்ப ட்ரெண்டாம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட குளியல் அறை புகைப்படம்..!
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு பயில்வான் மற்றும் நடிகை சகிலா கலந்து கொண்ட ஒரு பேட்டியில் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகள் ஏற்பட்டது. அதில், நடிகைகளை பற்றி பேசி வரும் பயில்வானின் மகளே ஒரு லெஸ்பியன் தான் இதை ஏன் அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்று நடிகை சகிலா வெளுத்து வாங்கி கேள்வி கேட்டிருந்தார்.
மேலும் படிக்க: ஒரே ஒரு படம் ஓஹோன்னு வாழ்க்கை.. ரன்பீர் உடன் எல்லைமீறிய காட்சி.. 14 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை..!
அதற்கு பதில், அளித்த பயில்வான் இப்படி எல்லாம் பேச வேண்டாம். உங்கள் நாக்கு அழுகிவிடும் என்று கோபப்பட்டு கொந்தளித்தார். மேலும், பாடகி சுசித்ரா கூட பயில்வான் பற்றி அவதூறுகளை பரப்பிய நிலையில், அதற்கெல்லாம் பயில்வான் பதிலடி கொடுத்திருந்தார். லெஸ்பியன் என்று கூறப்பட்டு வந்த பயில்வான் ரங்க நாதனின் மகளுக்கு அவர் வீட்டிலேயே ஆண் ஒருவருக்கு நிச்சயதார்த்தம் நடத்தி அவசர அவசரமாக முடித்திருக்கிறார். இது குறித்து அதிகாரபூர்வ புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.