10, +2 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் : இந்த முறை இருமுறை..!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2024, 12:00 pm

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 10, 12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை 2 கட்டங்களாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் ஒரு நாளும், அடுத்த மாதத்தில் ஒருநாள் என இரு கட்டங்களாக விழா நடத்தப்படும் என தவெக கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று. சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது.

இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி. தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

மேலும் படிக்க: காங்கிரஸ் பாணியில் பாஜக.. மீண்டும் பெண் சபாநாயகர்? என்டிஆரின் வாரிசை களமிறக்க முடிவு!

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!