உதயநிதியால் ஸ்தம்பித்து நிற்கும் ‘அஜித் படம்’.. இருக்குற பிரச்சினை போதாதுனு இது வேறயா?..

Author: Vignesh
11 June 2024, 12:15 pm

மூன்று பெரிய பட்ஜெட் படங்களை ஒரே நேரத்தில் கமிட் செய்து என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறது லைக்கா நிறுவனம். பல நஷ்டத்தால் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் லைக்கா நிறுவனம் இருந்து வருகிறது. இநதியன் 2, விடாமுயற்சி, வேட்டையன் போன்ற பெரிய படங்களை தயாரித்து சிக்கலில் சிக்கி வருகிறது.

ajith udhayanidhi

இதனால், ரஜினிகாந்த் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம். முன்னதாக, இந்தியன் 2 படப்பிடிப்பு ஒரு படியாக முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டும் நடந்து வருகிறது. பிரம்மாண்ட பாடலை எடுக்க நினைத்த சங்கர் லைக்கா நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் அந்த பாடல் இல்லாமலேயே படத்தை முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

ajith udhayanidhi

மேலும், ஜூலை 12ஆம் தேதி இந்தியன் 2 ரிலீஸ் ஆக இருப்பதால் அப் படத்தின் லாபத்தை வைத்து விடாமுயற்சிக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி சமாளிக்கலாம் என்று லைக்கா நிறுவனம் திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கும் முட்டுக்கட்டை போடும் விதமாக ரெட் ரெயிண்ட் இருந்து வருகிறது. அதாவது, இப்படத்திற்கு ஏற்பட்ட பல சிக்கல்களை தீர்த்து வைத்ததே உதயநிதி ஸ்டாலின் தான் என்று கூறப்படுகிறது.

ajith-kamal-rajini

மேலும் படிக்க: தாய் பாசத்துல நயன் செய்யும் அலப்பறை.. அபார்ட்மெண்டையே காலி செய்தது இதனால் தானா?..

அதே சமயம், இந்தியன் 2 வின் வியாபாரமும் அமோகமாக நடந்து வரும் நிலையில், பணம் கைக்கு வந்துவிடும் என எண்ணிய லைக்காகவுக்கு தற்போது, பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம். இந்தப் படத்திற்காக நாங்கள் நிறைய பணம் செலவு செய்துள்ளோம். ஆகையால், லாபத்தை முதலில் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என்று லைக்காவிற்கு உதயநிதி கண்டிஷன் போட்டு செக் வைத்துள்ளாராம். இதனால், வேட்டையன் விடாமுயற்சி படங்களுக்கு பணம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் லைக்கா இருந்து வருகிறது.

vidamuyarchi

மேலும் படிக்க: சம்திங் சம்திங்கா?.. பிரபலத்துடனான காதலை கன்ஃபாம் செய்த அம்மு அபிராமி.. வைரலாகும் போட்டோ..!

உதயநிதி ஸ்டாலினின் தரப்பு இப்படி ஒரு செயலை செய்துள்ளது லைக்கா நிறுவனத்திற்கு சங்கடத்தை கொடுத்துள்ளதாகவும், அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு மேலும் சிக்கல் வந்த வண்ணமே இருந்து வருகிறது. இந்தியன்2 கிட்டத்தட்ட 250 கோடியில் ஆரம்பித்து 350 கோடி வரை செலவாகிவிட்டது. இவ்வளவு செலவு செய்தும் சங்கருக்கு முழு திருப்தி கிடைக்க வில்லையாம். ஆனால், ஷங்கர் கமல் இருவரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்களாம். அதாவது, ஆடியோ லாஞ்சில் கூட கமல் மிகப்பெரிய சக்சஸ் ஆகும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 213

    0

    0