குவைத் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள்.. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரங்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2024, 5:40 pm

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் என குவைத் என்பிடிசி நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்விபத்தில், கேரளாவை சேர்ந்த 19 பேர் , தமிழகத்தை சேர்ந்த 5 பேரும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெறித்து வருகின்றனர். அந்த வகையில், வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பக்கத்தில், “குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 273

    0

    0