டிரைவர் முதல் வேலைக்காரன் வரை.. சில்க் ஸ்மிதாவின் ரகசியத்தை உடைத்த ரம்யாகிருஷ்ணனின் கணவர்..!
Author: Vignesh14 June 2024, 12:42 pm
இந்திய சினிமாவின் மர்லின் மன்ட்ரோ என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா செல்லுலாய்டு முதல் டிஜிட்டல் வரையிலான இந்திய சினிமா வரலாற்றில் தன்னுடைய இடத்தை வேறொரு நடிகையால் நிரப்ப முடியாத படிக்கு ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக திரைத்துறையில் வாழ்க்கையை துவங்கிய இவர் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.
மேலும் படிக்க: மேலும் படிக்க: ஒதுங்கிய சூர்யா, இறங்கிய கவின்.. 18 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் 2-ம் பாகம்..!
அந்தப் பெயரே, இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு விதமான கிளாமரான காட்சிகளில் நடித்தார். திருமண வாழ்க்கையில் பெரும் துன்பவங்களை அனுபவித்த சில்க் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார். பல்வேறு மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் படங்கள் நடித்துள்ளார். இவரது மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
மேலும் படிக்க: ராயன் பட ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு.. உங்க ஸ்பீடு புரியுது ஆனா பாலா இருக்காரு பார்த்து..!
இந்நிலையில், தற்போது சில்க்ஸ்மிதா குறித்து அந்த வகையில் இயக்குனரும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவருமான கிருஷ்ண வம்சி சில்க்வுடன் பயணித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து உள்ளார். அவர் கூறுகையில், ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் எனக்கான ஒரு இடத்தை பிடிக்க சுறுசுறுப்பாக வேலை செய்த சமயம் அது. ஷூட்டிங்கில் எனக்கு கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்வேன். அப்படி இயக்குனர் வரப்பிரசாத் ராவிடம் என்னை அறிமுகப்படுத்த ஒருவர் என்னை அழைத்து சென்றார். அவரிடம் வேலைக்கு சேர்ந்து நான் செய்யும் வேலைகளை பார்த்த சில்க் ஸ்மிதா என்னை பாராட்டினார். தயாரிப்பில், இறங்கிய சில்ஸ் ஸ்மிதா, அவர் தயாரித்த ஒரு படத்தில் சில மாதங்கள் வேலை செய்திருக்கிறேன்.
மேலும் படிக்க: முட்டாள் ஆணை நம்புவது பயங்கரமானது.. யார சொல்றாங்க ராஷ்மிகா? வைரல் பதிவு..!
மேலும், அவரிடம் வேலை பார்த்தப்பின் தான் இயக்குனராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டேன். ஒருநாள் அன்னப்பூர்ணா ஸ்டுடியோ முன் புகை பிடித்துக்கொண்டிருந்தேன். என்னை கடந்து ஒரு கார் சென்றது. அந்த காரில் யார் இருக்கிறார் என்பது, எனக்கு தெரியாது. நான் அந்த காரை பெரிதாக கண்டுகொள்ளாமல் புகை பிடித்துக் கொண்டிருந்தேன். அந்த கடந்து சென்ற கார் என்னை நோக்கி திரும்பி வந்து வேகமாக பிரேக் போட்டு நின்றது. காருக்குள் இருந்த சில்க் ஸ்மிதா கண்ணாடியை இறக்கியதை பார்த்ததும் ஒரு நிமிடம் ஷாக்காகிவிட்டேன்.
என்னை பார்த்து என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? என்று சில்க் ஸ்மிதா கேட்க, உங்களை மறக்க முடியுமா, நீங்கள் என்னைநினைவில் வைத்திருக்கிறீர்களா? இல்லையா என்று பலமுறை யோசித்திருக்கிறேன் என்று நான் கூறினேன். பின் நான் இயக்கிய படங்களை பார்த்ததாகவும் நன்றாக இருந்ததாகவும் கூறி சில்க் ஸ்மிதா பாராட்டினார். சில்க் ஸ்மிதாவை பொறுத்தவரை கார் டிரைவராக இருந்தாலும், சரி ஒரு மேக்கப் மேனாக இருந்தாலும் சரி தன்னிடம் வேலை செய்வர்களாக இருந்தாலும் சரி அவர்களை தன் சொந்தக்காரர்கள் போல் தான் நடத்துவார் என்று கிருஷ்ணா வம்சி கூறியிருக்கிறார்.