38 நாட்களே ஆன ஆண் குழந்தை சடலமாக மீட்பு : விசாரணையில் சிக்கிய தாத்தா – பாட்டி? அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 June 2024, 1:44 pm

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதி பாலமுருகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இவர்களுக்கு பிறந்து 38 நாட்களேயான ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சங்கீதா தனது பெற்றோர் ஊரான உட்கோட்டையில் தனது பெற்றோர்களுடன் இருந்து வந்த நிலையில் அதிகாலையில் தனது குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு தூங்கிவிட்டார்.

இந்நிலையில் காலை எழுந்து பார்த்தபோது தனது அருகில் படுத்திருந்த குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் எங்கும் குழந்தை கிடைக்கவில்லை.

இதனையடுத்து வீட்டுக்கு பின்புறம் பார்த்தபோது அங்கு இருந்த தண்ணீர் பேரலில் போர்வையுடன் குழந்தையை மூழ்கடிக்கப்பட்டு இறந்த நிலையில் குழந்தை இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் சங்கீதா கதறி அழுதுள்ளார். இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று சிசுவின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு குழந்தையின் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.

பிறந்து 38 நாட்களேயான ஆண் சிசு தண்ணீர் பேரலில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குழந்தையின் தாத்தா பாட்டியான வீரமுத்து ரேவதியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • sincere thanks to ajith kumar sir shared by arjun das என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்