பழுதான பிரேக்… 3 கி.மீ தூரம் சர்க்கஸ் காட்டிய அரசு பேருந்து : அலறிய பயணிகள்… ஓட்டுநரின் சாமர்த்தியம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2024, 12:09 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை டிஎன் 39 என் 0429 என்ற எண் கொண்ட பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது வி கே மில் பகுதியில் பேருந்து நிறுத்துவதற்காக ஓட்டுநர் முயற்சித்துள்ளார். அப்போது பிரேக் பிடிக்காமல் பேருந்து சென்றதாக கூறப்படுகிறது அப்போது சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்து சென்று கொண்டிருந்தது சுக்கம நாயக்கன்பட்டி அருகே பேருந்தை ஓட்டுநர் சாலை ஓரமாக விபத்து இன்றி நிறுத்தினார்.

இதனை அடுத்து பேருந்தில் இருந்த பயணிகளை பின்னால் வந்த அடுத்தடுத்த பேருந்துகளில் அனுப்பி வைத்தனர். உடனடியாக போக்குவரத்து கழகத்தில் இருந்து மெக்கானிக் வந்து பேருந்து சரி செய்து மீண்டும் டிப்போவிற்கு எடுத்துச் சென்றார்.

இது குறித்து டிப்போ மேலாளர் விசாரணை செய்து வருகிறார். இந்நிலையில் அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விபத்து இல்லாமல் ஓட்டுநர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் விபத்து தவிர்க்கபட்டது.

  • Actor Sri Caught By Families இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோ… முதல்முறையாக மகிழ்ச்சியை பகிர்ந்த நடிகர் ஸ்ரீ!