அவங்க கேட்டது காய் சாம்பார்.. ஆனா கிடைச்சது கரப்பான்பூச்சி சாம்பார்.. பிரபல ஹோட்டலில் அதிர்ச்சி..!
Author: Vignesh20 June 2024, 4:57 pm
திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள அன்னபூர்ணா உணவகத்தில் இன்று Lic குழுவினர் இணைந்து சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அதில், ஒரு பெண்மணிக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து, உணவக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சாம்பாரில் கரப்பான் பூச்சி இருந்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
தற்பொழுது, அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. உயர்தர சைவ உணவகம் என கூறப்படும் பல உணவகங்கள் முறையாக பராமரிப்பு இன்றி உணவுகள் பரிமாறப்படுவதாகவும் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனைத்து உணவுகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.