“மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு!”- புதுக்கோட்டையில் பரபரப்பு!

Author:
21 June 2024, 11:59 am
https://we.tl/t-9beFW13JQS

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான 191 சென்ட் நிலத்தை கடந்த 1984ல் ஆதிதிராவிட குடியிருப்பு கட்டுவதற்காக கையகப்படுத்த சென்ட் ஒன்றுக்கு 450 ரூபாயை நீதிமன்றம் நிர்ணயித்த நிலையில் ராமசாமிக்கு மொத்தம் உள்ள தொகையில் 3.98 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை இதனால் வரை வரவில்லை என்று கூறி ராமசாமி புதுக்கோட்டை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ராமசாமிக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 5,28,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் இதனால் வரை கொடுக்காததால் சார்பு நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த நடேசன் என்பவரிடம் ஆதிதிராவிட குடியிருப்பு கட்ட 1992ல் 186 சென்ட் நிலத்தை கையகப்படுத்த ஒரு சென்டருக்கு 1500 ரூபாயை நீதிமன்றம் நிர்ணயத்த நிலையில் மொத்த தொகையிலிருந்து 4,71,438 ரூபாயை வழங்காததால் அவர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு கொடுக்கவேண்டிய தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 7,58,000 ரூபாயை நடேசனுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் இது நாள் வரை மாவட்ட நிர்வாகம் வழங்காததால் சார்பு நீதிமன்றம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து இரு வேறு வழக்குகளிலும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள சார்பு நீதிமன்ற உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்ற அமினா,பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்பொழுது துணை ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்