கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையை உடனடியாக இருந்துள்ளது என்று பலர் கூறி வந்த நிலையில் எஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆன மோகன் என்பவர் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் என்று தெரிந்ததால் தான் முன்கூட்டியே பணி ஓய்வு பெற்றார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இதனை மறுக்கும் விதமாக அவர் தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது நிகழ்ந்திருக்கும் துயர சம்பவத்தை தொடர்புபடுத்தி என்னை பற்றிய செய்திகள் வெளி வந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது இது முற்றிலும் தவறான செய்திகள் தான். நான் பணியில் இருக்கும் போது விருப்ப ஓய்வு பெற்றேன் அதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் எனது மகள் மற்றும் மருமகள் ஆகியோருக்கு பிரசவத்தை கவனித்திக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது அதனால் தான் நான் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். கள்ளச்சாராய காச்சுதலுக்கு பயந்து தான் பணி ஓய்வு பெற்றேன் என்று செய்தி முற்றிலும் வதந்தி, இனி இதுபோல் தவறாக சித்தரித்து செய்தி பரப்பினால் அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் தெரிவித்துள்ளார்.