இன்னமும் அடங்காத மரண ஓலம்.. ஃபுல் போதையில் மயங்கிய தந்தை.. கட்டியணைத்தபடி தூங்கிய சிறுமி..!

Author: Vignesh
22 June 2024, 2:10 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், இருவர் முதலில் உயிரிழந்தனர். இருப்பினும், கள்ளச்சாராயத்தால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பது அப்போது தெரியவில்லை. அதனால், அவர்களின் இறுதிச்சடங்கிற்கு வந்தவர்களும் கலாச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இதுவே காரணமாக அமைந்தது. இந்த விவகாரத்தில், சுமார் 150-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில், அவர்களுக்கு வாந்தி மயக்கம் வயிற்றெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர் கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கல்லூரி, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷ சாராயம் தொடர்பாக 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இடையில், இந்த கொடூரம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, அதே கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயத்தின் ஆபத்தை துளியும் உணராமல் இளைஞர் ஒருவர் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து உள்ளார். இந்த இளைஞரின் மாமியார் ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இப்போது மருமகனும் முழுபோதையில் சாலையோரத்தில் கிடந்துள்ளார். இதில், கொடுமை என்னவென்றால் அவரது குழந்தையும் கூடவே இருந்துள்ளது. குடிபோதையில், தந்தை இருக்க அந்த பெண் குழந்தை அவருக்கு அருகிலேயே இருந்துள்ளது. ஒரு கட்டத்தில், அந்த போதை இளைஞரை கட்டி அணைத்தபடி அந்த சிறுமி இருந்துள்ளார். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அந்த போதை இளைஞரை எழுப்பி விசாரித்துள்ளனர். இருப்பினும், போதையின் உச்சத்தில் இருந்த அந்த இளைஞர் சரியாக எதுவும் பேசவில்லை. உணவு வாங்கி குழந்தைக்கு தரலாமா எனக் கேட்ட போதும் அதை வாங்க அந்த இளைஞர் மறுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் தானும் கள்ளச்சாராயம் குடித்ததாக அந்த இளைஞர் கூறி இருக்கிறார். இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 262

    0

    0