அம்மா உணவக ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… சென்னை மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2024, 2:26 pm

சென்னையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை உயர்த்தி வழங்க சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஊதியத்திலிருந்து ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மா உணவகங்கள் கடந்த 2013-16 காலகட்டத்தில் திறக்கப்பட்டன. தற்போது 399 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கான ஊதியம் ரூ.300-ல் இருந்து ரூ.325-ஆக உயர்த்தி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால் ஆண்டுக்கு சென்னை மாநகராட்சிக்கு ரூ.3.07 கோடி கூடுதல் செலவாகும். சென்னை மேயர் பிரியா ராஜன் தலைமையில், நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 343

    0

    0