மற்ற வாகனங்களின் பாகங்களை பொருத்துவதா? ROYAL ENFIELD சர்வீஸ் சென்டரில் நடந்த ஷாக் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan26 June 2024, 2:28 pm
கோவை கரும்பு கடை பகுதியை சேர்ந்தவர் அஜ்மல். ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக ராயல் என்பீல்ட் ஹிமாலயா பைக்கை வாங்கியுள்ளார்.
வாகன என் tn 99 y 5940 இந்த வாகனத்தை நான்காவது சர்வீஸ்க்காக குனியமுத்தூர் பகுதியில் உள்ள ராயல் என்பீல்ட் கடந்த மே மாதம் 14 தேதி சர்வீஸ் செய்ய கொடுத்துள்ளார்.
அதன் பின்பு ராயல் என்பீல்ட் சரி செய்யும் மெக்கானிக் உதிரி பாகங்கள் வரவில்லை என இழுத்தடித்து உள்ளனர். கடந்த ஒன்றரை மாதமாக இந்த வாகனத்தை அவர்கள் தரவில்லை.
இதனால் நேரடியாக சென்ற அஜ்மல் அவரது வாகனத்தை பார்க்கும் பொழுது சர்வீஸ் செய்யும் மெக்கானிக் அந்த வாகனத்தை எடுத்துச் சென்று விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
கிளட்ச் லிவர் ரேடியேட்டர் கார்ட்,பம்பர் சேதம் அடைந்துள்ளது இதைப் பற்றி கேட்டதற்கு நாங்கள் வேறு வாகனத்திலிருந்து உங்கள் வண்டிக்கு மாற்றி தருகிறோம் எனவும் தெரிவித்து உள்ளனர்.
அதன்பின்னர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் இது பற்றி அவர் புகார் தெரிவித்து இருந்தார் காவல்துறையினர் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என கூறி உள்ளனர்.
ROYAL ENFIELD SERVICE சென்டரில் வாடிக்கையாளர் குற்றச்சாட்டு!#viralpost | #viralvideo | #viralreels | #viralshorts | #shortsviral | #trendingvideos | #viralnews | #viral | #video | #royalenfield | #bikeservicecenter | #scam | #customer | #bike | #biker | #royalenfieldbike |… pic.twitter.com/xkMhXtqQAc
— UpdateNews360Tamil (@updatenewstamil) June 26, 2024
ராயல் என்ஃபீல்டு நிர்வாகிகளை அழைத்து உடனடியாக வாகனத்தை தாருங்கள் என போலீசார் கூறியுள்ளனர்.
இருசக்கர வாகன விற்பனையாளர்கள் விற்கும்போது மட்டும் நன்றாக பேசிவிட்டு அதன் பிறகு சர்வீஸ் என்று போனால் இரு சக்கர வாகன உரிமையாளர்களை அலையவிட்டு மன உளைச்சல் ஏற்படுத்துவதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.