எமர்ஜென்சி காலத்தில் போலீசிடம் இருந்து தப்பிக்க மாறுவேடத்தில் சுற்றிய மோடி : வைரலாகும் போட்டோஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2024, 3:00 pm

இந்தியாவில் 1975ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவசர பிரகடனம் (எமர்ஜென்சி) கொண்டு வந்தார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

அதில் ஒரு பகுதியாக, அவசர பிரகடனத்திற்கு எதிராக மக்களை திரட்டும் பணியில் நரேந்திர மோடி ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முக்கிய நிர்வாகியாக இருந்தார். இதையடுத்து மோடியை கைது செய்ய போலீஸ் முனைப்பு காட்டியது.

இதனால் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள பலரும் பல்வேறு இடங்களுக்கு தப்பிச் சென்றனர். மோடியும் போலீஸிடம் இருந்து தப்பிக்க பல்வேறு மாறுவேடங்களை போட்டுள்ளார்.

மோடி, தலையில் டர்பன் அணிந்தும், காவி உடையில் துறவியை போலவும், சுவாமிஜி போலவும் பல வேடங்களில் சுற்றியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?