சிபிஐ விசாரணை னா என்னனு தெரியுமா? வரலாறு தெரிஞ்சுக்கோங்க : இபிஎஸ்க்கு ஆர்எஸ் பாரதி அறிவுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2024, 6:48 pm

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;- உண்மைக்கு புறம்பான தகவல்களை இபிஎஸ் பரப்பி வருகிறார்.

உண்மையை விளக்க வேண்டியது திமுகவின் கடமை. இபிஎஸ் தான் உத்தம புத்திரர் போல பேசுகிறார். இபிஎஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் அவரது உறவினர்களுக்கு முறைகேடாக நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது. அது மீது எந்த ஒரு விசாரணையும் நடைபெறாத நிலையில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.சிபிஐ விசாரணை தேவையில்லை.

திமுக ஒருபோதும் கேட்டதும் இல்லை. சிபிஐ விசாரணை இருந்தால் வழக்கு தாமதமாகும் என்பதால்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை செய்யப்பட்டு வருகிறது

இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு விவகாரத்திலும், நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. சிபிஐ என்றால் என்னவென்று எங்களுக்கும் தெரியும். டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நிரபராதி என விடுவித்தது போல இபிஎஸ் பேசி வருகிறார். இபிஎஸ்க்கு வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை என கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 258

    0

    0