ஏன் சினிமாவ விட்டு போறன்னு கேட்டேன்.. விஜய் இப்படி சொல்லுவாருன்னு எதிர்பார்க்கல..!
Author: Vignesh27 June 2024, 2:36 pm
விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் தயாராகி இருக்கும் திரைப்படம் தான் கோட் ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றதாக தகவல்கள் வந்தது.
ஆனால், தற்போது ஜீ நிறுவனம்தான் கோட்படத்தின் சேட்டிலைட் உரிமையை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் தீவிர அரசியலில் களமிறங்க திட்டமிட்டு கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026 தேர்தலில் போட்டியிட இருப்பதால் அதற்கு முன் ஒப்புக்கொண்டு படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து முழுமையாக விலக உள்ளார். தொடர்ந்து நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள். இருப்பினும், விஜய் அரசியலில் தற்போது இருந்தே தீவிரம் காட்ட தொடங்கிவிட்டார்.
சமீபத்தில், நடந்த கள்ளச்சாராய சம்பவத்தில் அதை பார்த்தோம். அவர் நேரடியாக மருத்துவமனை சென்று அனைவரையும் பார்த்திருந்தார். விஜய் நண்பர் சஞ்சீவ் அளித்த பேட்டியின் போது விஜய் சினிமாவிலிருந்து விலகுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த, சஞ்சீவ் தானே விஜயிடம் அதை பற்றி நேரடியாக கேட்டதாகவும், இதற்கு சொன்ன பதில் இதுதான் என்று தெரிவித்திருக்கிறார். “கேள்விப்பட்டயா?.. அப்போது உண்மைதான்”… என ஒரே வரியில் விஜய் கூறிவிட்டாராம்.