TVK தலைவர் யார்?.. வெளியான வீடியோவால் விஜயை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
28 June 2024, 1:54 pm

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கக்கூடிய விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு ஆரம்பித்தார். தன்னுடைய கட்சியை ஆரம்பித்ததும், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பரிசுத்தொகைகளை வழங்கி கௌரவித்து வருகிறார்.

vijay

இந்த ஆண்டும் அதேபோல 10 மற்றும் 12ஆம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. திருவான்மியூரில், இருக்கும் ஒரு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்களுக்கு விருது வழங்கினார் விஜய்.

vijay

இந்நிகழ்ச்சியில், கலந்து கொள்ள வரும் மாணவர்களை தமிழக வெற்றிக்கழகத்தின் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார். அப்போது, அந்த மாணவர்களுக்கு தின்பண்டங்கள் கொண்ட கை பையை கொடுத்து மாணவர்களை வரவேற்ற புஸ்லி ஆனந்தின் காலில் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் விழுந்துள்ளனர். காலில் விழும் வீடியோவை பார்த்த நெட்டிஷன்கள் அவரை கலாய்த்தும் கட்சியின் தலைவர் யார் காலில் இவர் காலில் என் விழ வேண்டும் என்று கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!