இதுக்காகவா கல்யாணம் பண்ண.. விபரீத முடிவு எடுத்த பெண்; சினிமா பாணியில் காப்பாற்றிய மீனவர்கள்..!

Author: Vignesh
29 June 2024, 12:35 pm

திருப்பதி: ஆந்திரா கோதாவரி நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை சினிமா பாணியில் படகில் விரைந்து மீட்டு காப்பாற்றிய மீனவர்கள்.

கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்தியில் குடும்ப தகராறு காரணமாக துடால நாகலட்சுமி (40) பெண் ரயில் பாலத்தில் இருந்து கோதாவரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

நாகலட்சுமி கோதாவரி நதியில் குதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கவனித்த உள்ளூர் மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் உடனடியாக களத்தில் இறங்கி அங்கிருந்த
மீனவர்களின் உதவியுடன் நாகலட்சுமி மீன்பிடி படகுமூலம் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அறிவுரை கூறி உறவினர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது ஒரு தீர்வாகாது என அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறியும் இதுக்காகவா திருமணம் செய்து கொண்டாய் என்று கேள்வி எழுப்பும் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

தகவல் கிடைத்த உடன் விரைந்து செயல்பட்டு வேகமாக நடவடிக்கை எடுத்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய போலீசாருக்கு போலீஸ் உயரதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!
  • Close menu