புத்திசாலி ஹீரோ; மனம் நெகிழ்ந்த மனீஷா

Author: Sudha
1 July 2024, 3:19 pm

இயக்குனர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் இந்தியன் 1 திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை மனீஷா கொய்ராலா.அதற்குப் பிறகு முதல்வன் படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.அந்த திரைப்படத்தில் ஹீரோவாக அர்ஜுன் நடித்திருப்பார்.

இந்தியன் திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப் பட்டது. தற்போது இந்தியன் 2 ஜூலை மாதம் 12 ஆம் தேதிவெளியாக உள்ள நிலையில்
பட விழா சென்னை மும்பை போன்ற நகரங்களில் நடைபெற்றது.மும்பையில் நடந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்துள்ளார் நடிகை மனீஷா கொய்ராலா.இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர்.நான் சந்தித்த புத்திசாலி நடிகர்களில் முக்கியமானவர் என குறிப்பிட்டு அவரை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி. இந்த சந்திப்பு மிக அற்புதமானது என பகிர்ந்து இருந்தார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!