கடந்த வாரம் செங்கோல்… இந்த வாரம் இந்துக்கள் : I.N.D.I.A கூட்டணி ஈகோவை அடக்கமுடியல… அண்ணாமலை சாடல்!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2024, 8:23 pm

மக்களவையில் விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுகையில், ”பிரதமர் மோடி ஒட்டுமொத்த இந்து மதத்தின் பிரதிநிதி அல்ல. பா.ஜ.,வின் இந்துக்கள் வன்முறையாளர்கள்; உண்மையான இந்துக்கள் அல்ல” எனப் பேசினார்.

இந்த வீடியோவை எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி தனது உண்மை நிலையை அம்பலப்படுத்தி வருகிறது.

கடந்த வாரம் செங்கோலை விமர்சித்த இண்டியா கூட்டணியினர், சிறுபான்மையினரை திருப்திப்படுத்த ஹிந்துக்களை விமர்சித்து வருகின்றனர்.
பார்லிமென்டில் இந்துக்களை வன்முறையாளர்கள் என கூறியதற்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்ற இழிவான கருத்துக்களால் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டுள்ளனர்.

இண்டியா கூட்டணியினரின் ஈகோவை அடக்க முடியவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 224

    0

    0