முன்னாள் எஸ்ஐ மனைவியிடம் ரூ.6 லட்சம் மோசடி… பாஜக இளைஞரணித் தலைவர் மீது பகீர் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2024, 10:41 am

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூ டவுன் பகுதியை சார்ந்த கோவிந்தன் முன்னாள் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் தற்போது உயிரிழந்த நிலையில் இவருடைய மனைவி மலர்க்கொடி (70) இவரிடம்

திருப்பத்தூர் அடுத்த ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சௌந்தரராஜன் மகன் விவேகானந்தன் இவர் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி தலைவராக உள்ளார்.

கடந்த ஆண்டு 6 லட்ச ரூபாயை மலர்க்கொடியிடம் கடனாக பெற்று திருப்பித் தருவதாக கூறியுள்ளார். ஆனால் பலமுறை விவேகானந்தனிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார் இதுவரை தராமல் இருத்தடித்து பண மோசடி செய்துள்ளார்.

இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான மலர்கொடி திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னிடம் பண மோசடி செய்த பாரதிய ஜனதா கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி தலைவர் விவேகானந்தன் மீது தனது பணத்தை மீட்டு தரக்கோரியும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!