சமந்தா பாவம்.. ஒரே ஹீரோயினோடு வருட கணக்கில் ரகசிய உறவில் நாகார்ஜுனா – நாக சைதன்யா?..

Author: Vignesh
2 July 2024, 3:15 pm

பொதுவாக சினிமா நடிகர் என்றாலே கிசுகிசுகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில், தெலுங்கு திரைஉலகில் அதிகம் கிசு கிசுக்களில் சிக்கிவர் நாகார்ஜுனா. அவரைப் போலவே தற்போது, அவரது மகன் நாக சைதன்யாவும் அடிக்கடி நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கி வருகிறார். இந்த நிலையில், நாகர்ஜுனா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஒரே நடிகையுடன் ரகசிய உறவில் இருந்ததாக பேச்சுக்கள் பல எழுந்து வந்தது.

naga chaitanya

தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும நாகர்ஜுனா பாலிவுட் நடிகை தபுவை காதலிப்பதாகவும் அவர்கள் இருவரும் தற்போது வரை உறவில் இருப்பதாகவும் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, நடிகை தபுவுக்கு தற்போது 50 வயதுக்கு மேல் ஆகியும் அவர் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் நாகார்ஜுனா மீது உள்ள காதல் தான் என்றெல்லாம் கூறப்பட்டது.

தபுவை தொடர்ந்து, நடிகர் நாகார்ஜுனாவுடன் அதிகம் கிசுகிசுக்கள் சிக்கியவர் அனுஷ்கா செட்டி தான். நடிகை அனுஷ்காவை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே நாகார்ஜுனா தான் பூரி ஜெகநாத் இயக்கத்தில், அவர் நடித்த சூப்பர் படம் மூலம் ஹீரோயினாக அனுஷ்கா அறிமுகமானார். இதை அடுத்து, அடுத்தடுத்து படங்களிலும் நாகர்ஜுனாவுடன் சேர்ந்து அனுஷ்கா நடித்திருந்தார். கிங் மற்றும் கேடி ஆகிய திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டமும் நாகார்ஜுனாக்காக ஆடியிருந்தார்.

naga chaitanya

இப்படி தொடர்ந்து, நாகார்ஜுனா படத்தில் நடித்ததால் அனுஷ்கா கிசுகிசுவில் சிக்கினார். இதுகுறித்து, ஒருமுறை பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நாகர்ஜுனா நான் உயரமாக இருக்கிறேன். அதனால், எனக்கு பக்கத்தில் உயரமான ஹீரோயின் இருந்தால் நல்லா இருக்கும்னு தோணுச்சு அந்த ஒரு காரணத்திற்காகத்தான் அனுஷ்காவை பரிந்துரைத்தேன். அதனால், தான் அவருடன் பல படங்களில் நடித்தேன். அதுதான் விஷயம் வேறொன்றும் இல்லை என்று விளக்கி இருந்தார்.

naga chaitanya

அதேபோல, நாகார்ஜுனாவுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளுக்கு பதிலடி கொடுத்த நாகர்ஜுனா நாக சைதன்யாவைவிட அனுஷ்கா மூத்தவர் சைதன்யாவை விட அவர் உயரமும் கூட இருவருக்கும் எப்படி செட்டாகும்? அவரவர் இஷ்டம் போல பேசுகிறார்கள் என்று நாகார்ஜுனா அந்த பேட்டியில் கோபமாக தெரிவித்து இருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பண்றதெல்லாம் பண்ணிட்டு எப்படி மழுப்புறாங்க பாத்தியா என்று கமெண்ட்களில் கூறி வருகின்றனர். மேலும், பாவம் சமந்தா நல்ல வேலை இந்த குடும்பத்தில் இருந்து போயிட்டாங்க என்று சமந்தாவுக்கு ஆதரவாகவும் கமெண்ட்களில் பேசி வருகிறார்கள்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 166

    0

    0