பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு.. சாதிக்கும் மதவாதத்திற்கும் அளிக்கும் வாக்கு : பீட்டர் அல்போன்ஸ் கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2024, 2:22 pm

சிறுபான்மை ஆனையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விக்கிரவாண்டியிலுள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா போட்டியிடுவதால் அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இடைத்தேர்தலில் ஏன் இவ்வளவு முக்கியதுவம் கொடுக்கிறோம் என்றால் பாசசீச அரசியல் மதவாதத்தை, சாதிய வாதத்தை, முன்னெடுத்த பாஜகவை மக்கள் விரும்பவில்லை என்பதால் தான் 40 க்கு 40க்கு இந்தியா கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சாதிய அரசியலையும் மதவாத அரசியலை நிராகரிப்பார்கள் என்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிற சாதியவாதிய பாமகவை மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் பாஜகவின் முகமூடியாக வால்பிடிக்கின்ற பாமகவை மக்கள் நிராகரிப்பார்கள்

முன்னேற்றத்திற்கு மத நல்லினக்கத்துக்கும், திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் சிறுபான்மையினருக்கான பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாக கூறினார்

போதை பொருள் கள்ள சாராயம் தமிழகத்தில் மட்டும் உள்ள பிரச்சனை அல்ல இந்தியா முழுவதும் எல்லா இடங்களில் உள்ளது. இதனை கட்டுபடுத்துவது சவலாக உள்ளது போதை பொருட்கள் குஜராத்திலிருந்து தான் பல்வேறு பகுதிகளுக்கு வருகிறது இதனை தடுக்கக்கூடிய அதிகாரம் ஒன்றிய அரசுக்கு தான் உள்ளது என்றும் தெரிவித்தார் மேலும் கூட்டத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் மற்றும் சிறுபான்மை நலன் துறை அமைச்சர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்