சல்லி சல்லியா நொறுங்கிடுச்சே.. சுற்றுலா பேருந்து தனியார் பேருந்து மீது மோதி விபத்து..!
Author: Vignesh3 July 2024, 11:03 am
கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து தனியார் பேருந்து மீது மோதியதில் பஸ்சின் முன்பகுதி சேதம் ஆன விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி – பெரிந்தல்மன்னா வழித்தடத்தில்
தனியார் பஸ்சும், சுற்றுலா பஸ்சும் மோதிக்கொண்டன. இதில் தனியார் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது. விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை.
சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருக்கும் போது வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது இதில் தனியார் பேருந்தின் முன் பகுதி முற்றிலும் சேதம் ஆனது.
காலை என்பதால் பெரிய அளவு பயணிகள் பேருந்தில் இல்லை. விபத்தில் சற்று நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பேருந்து அங்கிருந்து மாற்றப்பட்டது. சுற்றுலா பேருந்து தனியார் பேருந்து மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.