போதை ஆசாமியை கீழே தள்ளிவிட்டு பைக்கை நைசாக நகட்டி சென்ற நபர்.. காட்டிக்கொடுத்த CCTV..!
Author: Vignesh3 July 2024, 2:24 pm
பழனி அருகே இரு சக்கர வாகனத்தில் போதையில் படுத்திருந்த நபரை, மர்ம நபர் ஒருவர் கீழே தள்ளிவிட்டு பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையின் முன்புறம் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்திலேயே போதையில் படுத்து உள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர். இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் படுத்து இருந்தவரை கீழே தள்ளி விட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சிசிடிவி காட்சிகளை வைத்து பழனி நகர போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.