சென்னையில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பரங்கிமலையில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan4 July 2024, 11:22 am
சென்னை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை மிக முக்கியமான தேவையாக இருக்கிறது.
லட்சக்கணக்கான பயணிகள் தினமும் மெட்ரோ ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரமாக சோதனை நடத்தினர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.நேற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.