பைக்ல இருந்து கீழ விழுந்துட்டாங்களா.. சோலோ ரைட் க்ளிக்ஸை வெளியிட்ட மஞ்சு வாரியர்..!

Author: Vignesh
4 July 2024, 3:21 pm

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகை, நடன கலைஞர் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படம் இவருக்கு அடையாளமாக மாறியது.

manju warrier

இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார் இருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். தொடர்ந்து பல வித்யாசமான கதைகளில் நடித்து வரும் மஞ்சு வாரியார் கடைசியாக தமிழில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். துணிவு படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் நடிகை மஞ்சு வாரியரும் லடாக் பைக் ட்ரிப்பில் உடன் சென்றிருந்தார். அந்த புகைப்படங்களை பதிவிட்டு அவர் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.

manju warrier

முன்னதாக பைக் ரைட் மீது அதிக ஆர்வம் கொண்ட மஞ்சு வாரியர் பல லட்சம் கொடுத்து சொந்தமாக ஒரு பைக்கை வாங்கி இருந்தார். தற்போது, மஞ்சுவாரியர் தனியாக பைக் ரைட் செல்ல தொடங்கி இருக்கிறார். இந்நிலையில், அவர் பைக்கில் இருந்து கீழே விழுந்திருக்கிறார். அவருக்கு எந்த காயங்களும் ஏற்படாத நிலையில் கைக் உடன் இருக்கும் புகைப்படங்களை மட்டும் மஞ்சு வாரியார் வெளியிட்டு இருக்கிறார்.

manju warrier
  • sun pictures released the announcement of magnum opus which is atlee allu arjun project சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?