சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் அரசு வேலை தருவதாக மோசடி.. காம இச்சைக்கு பயன்படுத்திய அரசு மருத்துவமனை பணியாளர்!
Author: Udayachandran RadhaKrishnan4 July 2024, 1:26 pm
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேவுள்ள மடதள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அதியமான்.
தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், நோயாளிகளை பார்க்க வந்து செல்லும் பெண்களை குறிவைத்து மெல்ல பேச்சு கொடுத்து நோயாளி யார், என்ன உறவுமுறை வேண்டும் என முதலில் விசாரித்து, தான் இந்த நேரத்தில் மருத்துவமனை பணியில் இருப்பேன் எதாவது மருத்துவ உதவி உள்ளிட்ட உதவி தேவைபட்டால் தன்னை தொடர்பு கொள்ளுங்கள் எனக்கூறி தனது செல்போன் எண்ணை பெண்களுக்கு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தி தந்திரமாக பேசி பேசி நாளடைவில், நட்பை வளர்க்கும் அதியமான் அரசுத்துறைகள், நீதிமன்றங்களில் வேலை பெற்று தருவதாக கூறி நம்ப வைத்து போலி பணி ஆணைகளை கொடுத்து லட்ச கணக்கான ரூபாய் பணத்தை பறித்தும், நம்பி ஏமாறும் பெண்களை தனது உடல் இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்தி ஏமாற்றுவது அதியமானின் தனி ஸ்டைலாக இருந்திருக்கிறது.
இப்படி வீழ்த்தப்பட்டவர் தான் இராணுவ வீரரின் மனைவி 1. ( அமலா (35 ) 2. கணவனை இழந்த விதவை பெண் காமாட்சி(26).. உள்ளிட்ட பலர்..
ராணுவ வீரரின் மனைவி அமலாவிற்கு தருமபுரி அரசு மருத்துவமனையில் அலுவலக உதவியாளர் பணி பெற்று தருவதாக கூறி ஏழு லட்ச ரூபாய் பணத்தை பறித்த அதியமான் போலியான பணியானை வழங்கியிருக்கிறார்.
இதே போல பென்னாகரத்தை சேர்ந்த விதவை பெண்ணான காமாட்சியிடமிருந்து நாலரை லட்ச ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட அதியமான், ஒசூர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளருக்கான பணி ஆணை என போலியான பணி ஆணை ஒன்றினை கொடுத்து ஏமாற்றியிருக்கிறார்.
இதே போல ஏரியூர் பகுதியை சேர்ந்த சில பெண்களிடம் சுமார் ஏழு லட்ச ரூபாய் பணம், வேறு சில பெண்கள் என மொத்தமாக சுமார் இருபத்தைந்து லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தை ஏமாற்றியும், பணம் கொடுத்த பெண்கள் உள்ளி்ட்ட பல பெண்களையும் தனது காம இச்சைக்கு அதியமான் இரையாக்கியிருக்கும் சம்பவங்கள் காவல் துறை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதே போல தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது
பாப்பாரப்பட்டி காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும், தில்லாலங்கடி பேர் வழியான அதியமானுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாவது மனைவி, மூனறாவது மனைவி என பட்டியல் நீண்டு சென்றதும், பல பெண்களிடம் தகாத உறவில் தொடர்பில் இருந்து வருவது குறித்தும் அதியமானே வாக்குமூலம் கொடுத்திருப்பதை கண்டு காவல்துறையினரே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்..
அரசு மருத்துவ மனையில் செவிலியருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்த ஒரு நபர் பெண்களை மட்டுமே குறி வைத்து இவ்வளவு பெரிய மோசடிகளை அரங்கேற்றியிருப்பதும், பெண்களை வீழ்த்தி பணத்தை பறித்தது குறித்தும், போலி பணி ஆணைகள் வழங்கியிருப்பது தொடர்பாகவும் விசாரணையை தீவிரபடுத்தியிருக்கிறது… காவல் துறை..
அரசு மருத்துவமனைகளில் அவசர மற்றும் தீவிர சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளி்ன் உறவினர்களை நோட்டமிட்டு, அவர்களை குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் நல்ல சிகிச்சை வழங்குகிறார்கள் எனக்கூறி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அதன் மூலம் தனியார் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட கமிசன் தொகையை பெற்று வந்திருக்கிறார்.. கைதாகியுள்ள அதியமான் என்பது அதிர்ச்சிக்கு மேல். மேல் அதிர்ச்சியளிக்கிறது.