டைட்டானிக் டைரக்டர் செய்த காரியம்; பகிர்ந்த டைட்டானிக் ஹீரோயின் கேட் வின்ஸ்லெட்,..
Author: Sudha5 July 2024, 10:51 am
ஆடம்பரப் பயணிகள் கப்பலான டைட்டானிக், அதன் முதற் பயணத்தின் போதே பனிப்பாறையுடன் மோதிக் கடலுள் அமிழ்ந்தது. ஆயிரக் கணக்கில் பயணிகள் இறந்து போன அந்த உண்மைச் சோகக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அமைந்ததே டைட்டானிக் திரைப்படம்.
அமிழ்ந்த ஆர்எம்எஸ் டைட்டானிக்கின் உண்மையான உடைந்த பகுதிகளைப் படம் எடுத்ததுடன், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் தொடங்கியது. மக்களை இந்த கதையில் ஆழமாய் ஊன்ற வைப்பதற்கு ஒரு காதல் கதைக்குள் திணித்தார் இயக்குனர் கேமரூன். காட்சிகள் அனைத்தும் அக்கடமிக் ம்ஸ்டிஸ்லாவ் கெல்டிஷ் (Akademik Mstislav Keldysh) என்னும் ரஷ்ய ஆய்வுக் கப்பலில் எடுக்கப்பட்டன. இத்திரைப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
டைட்டானிக் திரைப்படத்தை இயக்கிய பிறகு அவதார் எனும் அறிவியல் புனைவு திரைப்படத்தை சுமார் பத்து வருடங்களாக இயக்கி வெளியிட்டார்.இந்த திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பிற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியின் மூலம் வெற்றிகரமான 3D இயக்குநராக கருதப்படுகிறார்.
டைட்டானிக் திரைப்படத்தில் ஹீரோயின் கேட் வின்ஸ்லெட்டின் ஓவியத்தை கதாநாயகன் வரைவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.
அந்த சார்கோல் புகைப்படத்தை உண்மையில் வரைந்தது யார்? என ரசிகர்களிடம் கேள்வி இருந்தது.ஒரு பேட்டியில் அதன் ரகசியத்தை கேட் வின்ஸ்லெட் உடைத்தார்.
அவர் சொன்னது.. அந்த ஓவியத்தை உண்மையில் வரைந்தவர் டைட்டானிக் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.