நான் உன் மகன் மாதிரி.. வண்டியல ஏறு.. கண்ட இடம் தொட்டு இளைஞர் சில்மிஷம் : குதித்து தப்பிய மூதாட்டி!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2024, 8:18 pm

நாகை கீழ்வேளூர் அடுத்த வடக்காலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி வாசுகி (வயது 60). இவர் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை இரவு நாகை பாப்பாகோவிலில் உள்ள தர்காவில் இரவு படுத்து உறங்கிவிட்டு அதிகாலை வடக்காலத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் கடந்த மாதம் 21ம் தேதி அதிகாலை பாப்பா கோவிலில் ஆட்டோவுக்காக நின்றிருந்தவரை அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்ந இளைஞர் உங்க ஊருக்குதான் செல்கிறேன், நான் உங்க மகன் மாதிரி, தயங்காம ஏறுங்க என கூறி மூதாட்டியை தனது இருச்சக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது மூதாட்டிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தபடியே வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கண்ட இடத்தை தொட்டு சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டியை அடித்தும், மிரட்டியும் அழைத்துச் சென்ற இளைஞர், தொடர்ந்து மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

புதுச்சேரி அருகே வரும் போது அந்த இளைஞரிடம் இருந்து தப்பிப்பதற்காக வாகனத்தில் இருந்து கீழே குதித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மூதாட்டியை அடித்து கீழே தள்ளி இருச்சக்கர வாகனத்தை அவர் மீது ஏற்றி உள்ளார். அந்த வழியாக ஆட்கள் வந்தததும், இளைஞர் பைக்கை எடுத்து வேகமாக சென்று விட்டார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. மூதாட்டி மீது பைக்கை ஏற்றியதில் மூதாட்டியின் இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது வரை தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இது குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்ப்டடுள்ளது. கீழ்வேளூர் போலீசாரிடம் விசாரித்த போது குற்றவாளியை அடையாளம் கண்டு கொண்டதாகவும், தற்போது தலைமறவாகி உள்ளவனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் விரைவில் கைது செய்து விடுவோம் என தெரிவித்தனர்

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 418

    0

    0