கலக்கும் கபிலன் வைரமுத்து; இணையத்தில் ஹிட் அடித்த இரண்டு,..

Author: Sudha
6 July 2024, 10:04 am

கபிலன் வைரமுத்து பாடலாசிரியராக உதயம் NH4 திரைப்படத்தில் இடம் பெற்ற “வா இரவுகள்” எனும் பாடலின் மூலம் அறிமுகமானார். கவண், விவேகம் போன்ற படங்களுக்கு திரைக்கதையும் எழுதி இருக்கிறார்.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கோட்’ படத்தின் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் கடந்த வாரம் வெளியானது.

இந்த பாடலில் மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் செயற்கை நுண்ணறிவு குரல் பயன்படுத்தப்பட்டது. “சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ கருவறை மீண்டும் மணக்கிறதோ” எனத் தொடங்கும் இப்பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இந்த பாடலை இணையத்தில் பார்த்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து ‘இந்தியன் 2’ படத்தின் ‘காலண்டர் பாடல்’ வெளியாகியிருக்கிறது. முன்னாள் உலக அழகி டெமி இந்த பாடலில் நடனமாடியிருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் கபிலன் வைரமுத்து. யூடியூப் இந்திய தர வரிசையில், முதல் 2 இடங்களைப் பெற்றுள்ளது இந்த பாடல்கள்

கபிலன் வைரமுத்து ‘இந்தியன் 2’ படத்தில் வசனமும் எழுதி உள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?