ஆம்ஸ்டிராங்குக்கு ஸ்கெட்ச் போட்ட ஆட்டோ ஓட்டுநர்.. 3 முறை எச்சரித்த உளவுத்துறை : கோட்டை விட்டதா காவல்துறை?

Author: Udayachandran RadhaKrishnan
6 July 2024, 2:25 pm

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதைவிட இந்த கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததே பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலைதான் என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஆம்ஸ்ட்ராங் வீடு இருக்கும் பகுதியில் ஒரு பள்ளி உள்ளது. அந்த பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்துள்ளார் திருமலை.

ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும், இதன்பிறகே கொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து என உளவுத்துறையும், குற்றப்புலனாய்வு பிரிவும் 3 முறை எச்சரித்ததாக தகவலும் வெளியாகியுள்ளது. குத்துச்சண்டை தெரிந்த ஆம்ஸ்ட்ராங்கை எப்படி கொலை செய்வது என திட்டமிட்டே அரங்கேறியுள்ளனர்.

ஒருவேளை கத்தியால் அவரை வெட்டும் போது தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யவும் தயார் நிலையில் இருந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • vadivelu is the first option for retro movie ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!