குற்றம் 23 இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் 2017 ஆண்டைய ஒரு கிரைம் த்ரில்லர் திரைப்படம்.
எழுத்தாளர் ராஜேஷ் குமார் திகில் கதைகளின் மன்னன் என அறியப்படுபவர். கோயமுத்தூரை பூர்வீகமாக கொண்ட இவர் பாக்கெட் நாவல்கள் எழுதியதின் மூலம் புகழ் பெற்றார்.
ராஜேஷ் குமாரின் எண்ணி எட்டாவது நாள் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, சென்னையில் பணிபுரியும் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள காவலரான ஏசிபி வெற்றிமாறனைப் பற்றிய கதை. ஒரு பெண் காணாமல் போன ஒரு சாதாரண வழக்கில் அந்த பெண்ணை தேடும் போது மருத்துவ வல்லுநர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய குற்ற மோசடியை கண்டுபிடிக்கிறார்.
செயற்கைக் கருத்தரிப்புக்குப் பின்னால் நடக்கும் முறைகேடுகளை மையமாகக் கொண்ட குற்றவியல் கதை. எனவே நம் உடலின் 23 ஆம் குரோமோசாமான பாலின குரோமோசோமை குறிக்கும் வகையில் குற்றம் 23 என பெயரிடப்பட்டது.
பாவ மன்னிப்பு அளிக்கும் பாதிரியார் ஒருவர் மர்மமான முறையில் தேவாலயத்தில் இறக்கிறார். அதே நேரத்தில் பாவமன்னிப்பு கேட்டு அங்கே வரும் ஒரு பெண்ணும் காணாமல் போகிறார். இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்ற நோக்கில் உதவி ஆணையர் வெற்றிமாறன் விசாரணையில் இறங்குகிறார். சம்பவம் நடக்கும்போது தேவாலயத்துக்குச் சென்ற தென்றல் முதலான சிலர் கூறும் தகவல்களை வைத்துக்கொண்டு விசாரணையை முன்னெடுக்கிறார். கருவுற்ற பெண்கள் சிலர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்வது இந்த வழக்கை மேலும் சிக்கலாக்குகிறது. இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதுதான் இத்திரைப்படத்தின் மீதிக் கதையாக இருக்கும்.
0
0