சின்ன விஷயத்துக்கு கோபப்படுவாள்.. ஜெயம் ரவிக்கு சப்போட்டாக பேசிய ஆர்த்தியின் அம்மா..!
Author: Vignesh6 July 2024, 5:01 pm
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. எந்த நாளில் எந்த பிரபலங்கள் விவாகரத்தை அறிவிப்பார்கள் என்பது கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு விவாகரத்து லிஸ்ட் பெருசாகிக் கொண்டே உள்ளது. இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ள ஜெயம் ரவி ஆரத்தி தம்பதியினரை குறித்து சில பத்திரிகைகளில் ஜெயம் ரவி ஆரத்திக்கு இடையே, கருத்து மோதல் ஏற்பட்டது விரைவில் விவாகரத்து தொடர்பான தகவலை அறிவிப்பார்கள் என்று செய்திகள் வெளியாகி வந்தன.
சிலர் இதுபோன்ற செய்திகள் உண்மை இல்லை என்றும், இது வெறும் வதந்தியே என்றும் சொல்லி வந்தனர். மேலும், ஜெயம் ரவியின் மனைவி ஆரத்தி கணவருடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சைரன் படத்தின் 3 லைன் கதையை இயக்குனர் கூறிய பின்னர் ஜெயம் ரவியுடன் கூற சொல்லி படத்தை கமிட் செய்தேன். வயதான ரோலில் நடிக்கும் போது தலைமுடியை வெள்ளையாக்கினார்கள். ஆனால், நான் இயக்குனரிடம் கொஞ்சம் கருப்பாக்குங்கள் என்று உடனே ஜெயம் ரவி என்னிடம் ஆண்டி என்னை மாப்பிள்ளையாக பாக்காதீங்க ஆர்டிஸ்டா பாருங்க என்று சொன்னேன்.
மேலும், சுஜாதா பேசியபோது ஆர்த்தியும் ஜெயம் ரவி காதலித்த விஷயம் எனக்கு தெரிந்ததும் அதிர்ச்சியானேன். சினிமாவிற்கு சம்பந்தம் இல்லாதவர் எப்படி ஜெயம் ரவிவையை காதலித்தார் என்று தெரியவில்லை. ஏதோ, விழாவில் சந்தித்து காதலித்தார்கள் என்று கூறப்பட்டு வந்தது. திருமணத்திற்கு, பின்னர் இருவரும் சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு சண்டை இல்லாமல் இருக்காது.
அது இல்லாமல் என்ன சுவாரஸ்யம் இருக்கும் சில விவாதங்கள் வரும் ஆனால், நான் ரவிக்கு தான் சப்போர்ட் செய்வேன். ஆரத்தி என்னிடம் மாப்பிள்ளை என்று சப்போர்ட் பண்றியா நான் தப்பு பண்ணிட்டேன்னு சப்போர்ட் பண்றியான்னு கோபப்படுவாள். அப்படி கிடையாது, ரவி கொஞ்சம் அமைதி என் மகள் சின்ன சின்ன விஷயத்திற்கும் கோபப்படுவாள் என்று ஆரத்தியின் தாயார் சுஜாதா அளித்த பேட்டி தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது.