ஐந்து பேரின் டிஎன்ஏ; ரசிகர்களுக்கு கிடைத்த மிரள வைக்கும் அப்டேட் ,..

Author: Sudha
7 July 2024, 10:44 am

ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ஃபர்ஹானா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.

இவர் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் “டிஎன்ஏ” க்ரைம் – த்ரில்லர் ஜானரில் உருவாக உள்ளது. நடிகை நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

டிஎன்ஏ திரைப்படத்தில் 5 இசையமைப்பாளர்கள் பணியாற்ற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது..
சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவீன் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகிய 5 இசையமைப்பாளர்கள் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 156

    0

    0