கோவை மாமன்ற கூட்டத்தில் கூச்சல்… மேயர் ராஜினாமாவுக்கு காரணம் கேட்டு உறுப்பினர்கள் சரமாரிக் கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2024, 12:48 pm

கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்துள்ள நிலையில் கோவை மாநகராட்சி மாமன்ற சிறப்பு கூட்டம் விக்டோரியா ஹாலில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தை துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமை ஏற்று நடத்தினார். இதில், மேயர் கல்பனாவின் ராஜினாமா ஏற்கப்பட்டதாகா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த மேயர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை.

அப்போது, அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், ‘மேயர் கல்பனா எதனால் ராஜினாமா செய்தார்?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு, ‘அதிமுக மேயராக செ.ம.வேலுச்சாமி ராஜினாமா செய்தபோது விவாதம் நடத்தினீர்களா? ‘ என திமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனால், திமுக அதிமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து மேயரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே இக்கூட்டம் நடைபெற்றது.

கல்பனா ஆனந்தகுமார் மேயர் பதவியை மட்டுமே ராஜினாமா செய்துள்ளார், கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுக கவுன்சிலர் பிராபகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘கோவை மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் செயலற்ற மேயராக இருந்தார் என்று பலமுறை சொன்னோம்.

ஆனால் இப்போது தான் திமுகவுக்கு அவரை பற்றி தெரியவந்துள்ளது.மாநகராட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதை பலமுறை சுட்டிகட்டியுள்ளோம். மேயர் ஏன் ராஜினாமா செய்துள்ளார் என்பதை அரசு தனி குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும்.அவர் இரண்டு ஆண்டுகள் என்னென்ன ஊழல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை விசாரிக்க வேண்டும்.

மேயர் இல்லாத சமயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கும். எனவே, மாநகராட்சி செயல்பாடுகளை ஆணையாளர் நேரடியாக கண்கானிக்க வேண்டும்.
பழைய மேயர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை மறைத்து வைத்திருக்கிறார்கள். வாட்ஸ் அப்பில் குழு அமைத்து டெண்டர் எடுத்த மேயரை எங்காயவது பார்த்தது உண்டா.என்ன காரணத்திற்க்காக ராஜினாமா செய்தார் என்ற முழுவிவரத்தை கூட மன்றத்தில் துணை மேயர் வைக்கவில்லை’ என குற்றம்சாட்டினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்