என்னால் வரமுடியாது.. சூர்யா ஜோதிகா திருமணத்தை தவிர்த்த விஜயகாந்த்..!

Author: Vignesh
8 July 2024, 2:54 pm

மதுரை மாவட்டம் விருதுநகரில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ந் தேதி பிறந்தவர் தான் விஜயகாந்த். இவரது நிஜப்பெயர் விஜயராஜ் சினிமாவிற்காக விஜயகாந்த்தாக மாறினார். தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த். பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றார்.

இதனிடையே, தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Vijayakanth

இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.

vijayakanth-updatenews360

பொதுவாக, திறமையான நடிகராக கோலிவுட்டில் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.

vijay - vijayakanth

மேலும் படிக்க: சாப்பாடு விஷயத்தில் கடுப்பாக்கிய வனிதா.. திருமணத்தை குறிப்பிட்டு Nosecut செய்த பிரியங்கா..!

பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்துள்ளனர். விஜயகாந்தின் மூத்த மகன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், இரண்டாம் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

vijayakanth-updatenews360

மேலும் படிக்க: பிரபல நடிகையால் சுந்தர் C குடும்பத்தில் வெடித்த சண்டை.. கடுப்பில் கத்திய குஷ்பூ..!

இந்நிலையில், விஜயகாந்த் மறைவிற்குப் பின்னர் அவரது நினைவிடத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜயகாந்த் குறித்து பலரும் பல்வேறு சுவாரசியமான சம்பவங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சூர்யா ஜோதிகாவின் திருமணம் கோலாகலமாக நடக்க பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இந்த ஜோடியை வாழ்த்தினார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

jyothika-updatenews360

ஆனால், நடிகர் விஜயகாந்த் மட்டும் திருமணத்திற்கு செல்லவில்லை. பத்திரிக்கை கொடுக்க வந்த சிவகுமாரிடம் நான் வரமாட்டேன் என கட்டன் ரைடாக தெரிவித்துவிட்டார் நான் இப்போதுதான் கட்சியை துவங்கி இருக்கிறேன் அதை விரிவுபடுத்தும் பணியிலும் இறங்கி இருக்கிறேன் இது பலருக்கும் பிடிக்கவில்லை எப்போது கழகம் செய்யலாம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் இதனால் சூர்யாவின் திருமணத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது அதனால் நான் திருமணத்திற்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார் விஜயகாந்த் பின்னர் திருமணம் முடிந்து மணமக்களை நேரில் சந்தித்து விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 250

    0

    0