இது என்னுடைய படம்; தயாரிப்பாளர் ஏமாற்றுகிறார்; கலங்கும் புதுமுக இயக்குனர்

Author: Sudha
8 July 2024, 3:40 pm

ஆர்யமாலா’ என்னுடைய படம், தற்போது தயாரிப்பாளர், அவரையே இயக்குனர் என்று போட்டு படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக வடலூர் ஆதிரை என்பவர் தயாரிப்பாளர் மீது குற்றம் சாட்டியுள்ளார்..

2017ல் திரைப்பட நடிகர் பீச்சாங்கை கார்த்திக்,நடிகை மணிஷா ஜித் ஆகியோரை நாயகன்,நாயகியாகவும், இயக்குனர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், உஷா இசையமைப்பாளர் செல்வநம்பி அடங்கிய படக்குழுவை வைத்து பெப்சி அமைப்பின் அனுமதியோடு ஆண்டாள் என்கிறப் பெயரில் திரைப்படத்தை இயக்கி முடித்தேன்.

தற்போது அந்த திரைப்படம் ஆர்யமாலா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு தயாரிப்பாளரே இயக்குனர் எனும் பதிவோடு 08.07.2024 அன்று இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடைபெற உள்ளதாக அறிந்து வேதனை அடைந்தேன். ஊடக நண்பர்கள், பேஸ்புக் உறவுகள் எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக செயற்பாட்டளர்கள் ஒரு படைப்பாளியாக எனக்கு துணை நிற்குமாறு அன்போடு வேண்டுகிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, இன்று மாலை நடைபெறுவதாக இருந்த ‘ஆர்யமாலா’ படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர்.

  • age gap between priyanka deshpande and her husband vj vasi இவ்வளவு வயசு வித்தியாசமா? விஜய் டிவி பிரியங்காவின் இரண்டாவது கணவர் இப்படிபட்டவரா?