புதிய தொழில் நுட்பத்தில் முன்னணி ஹீரோயின்; இன்னொரு பாரா நார்மல் ஆக்டிவிடி?..

Author: Sudha
8 July 2024, 4:01 pm

‘ மலையாளத்தில் மஞ்சு வாரியார் நாயகியாக நடிக்க புட்டேஜ்’ என்ற படம் தயாராகிறது. ‘பவுண்ட் புட்டேஜ்’ தொழில் நுட்பத்தில் இந்த படம் தயாராகிறது.

பவுண்ட் புட்டேஜ் என்பது கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தாங்கள் காணும் காட்சிகளை தங்களின் செல்போன் மூலமாகவோ, அல்லது அவர்களிடம் உள்ள கேமரா மூலமாகவோ படம் பிடிப்பார்கள்.பிறகு அந்த படங்கள் தொகுக்கப்பட்டு ஒரு கதையாக சொல்லப்படும். ஹாரர் மற்றும் திகில் படங்கள் இந்த தொழில்நுட்பத்தில் உருவாகும்.

பாராநார்மல் ஆக்டிவிட்டி, டைரி ஆப் தி டெட், போன்ற படங்கள் இந்த தொழில் நுட்பத்தில் உருவானவை. சைஜு ஸ்ரீதரன் இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குனர் சைஜு ஸ்ரீதரன் கூறும்போது “புட்டேஜ் வழக்கமான படமல்ல, அட்டகாசமான நடிகர்கள், அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில், மிகப்புதுமையான களத்தில், இதுவரையிலான திரையின் பிம்பத்தை மாற்றி அமைக்கும் புதுமையான படமாக இருக்கும்” என்றார்.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?