அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறழ்சாட்சியம் : வற்புறுத்தலால் கோப்புகளில் கையெழுத்திட்டதாக வாக்குமூலம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2024, 6:52 pm

கடந்த 2006-11 காலகட்டத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடிபதவி வகித்தபோது விழுப்புரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடிஅளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் ராஜமகேந்திரன், வி.ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது2012-ல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் ஆகியுள்ளார்.

வழக்கு விசாரணைக்கு வந்த முன்னாள் கிராம உதவியாளர் மணி என்பவர் பிறழ் சாட்சியமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று அரசு அதிகாரிகளின் அறிவுரைப்படி சோதனை நடத்த சென்றதாக முன்னாள் கிாரம உதவியாளர் மணி கூறியுள்ளார்.

சோதனை முடித்த பின்னர் அதிகாரிகளின் வற்புறுத்தல் பேரில் கோப்புகளில் கையெழுத்திட்டேன், மற்ற விவரங்கள் ஏதும் தனக்கு தெரியாது என பிறழ் சாட்சியமாகியுள்ளார்.இதுவரை 34 பேர் அரசு தரப்பு சாட்சியமாக சாட்சியம் அளித்துள்ள நிலையில், 27 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 246

    0

    0