கோவையில் பிரபல தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் சீண்டல்.. LIBRARIAN வெறிச்செயல்.. மூடி மறைத்த பள்ளி நிர்வாகம்!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2024, 12:59 pm

கோவை வடவள்ளியை அடுத்த ஒரு கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் 800 – க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த பள்ளியில் 9 – ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நூலக பொறுப்பாளராக பணி புரிந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

அந்த நபரின் பாலியல் தொல்லை அதிகரிக்கவே மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். அதிர்ச்சி அடைந்து நடந்த விவரங்களை மாணவி படிக்கும் வகுப்பு ஆசிரியை ஒருவரிடம் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர்.

இந்த விவகாரம் தனியார் பள்ளிகளின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவரின் கவனத்துக்குச் சென்று உள்ளது. அவர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்து உள்ளார்.

சம்பவம் தொடர்பாக தனக்கு அறிக்கை அளிக்கும்படி அவர் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு உள்ளார். இந்தநிலையில் நூலக பொறுப்பாளர் திடீரென ராஜினாமா செய்து வேலையை விட்டு நின்று விட்டார்.

பள்ளி நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அவர் வேலையை விட்டு நின்றதாக கூறப்பட்டது. தற்போது இந்த விவகாரம் வெளியே கசிய தொடங்கி பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோல் மாணவிகளுக்கு உடனடியாக பாலியல் தொல்லை ஏற்பட்டால் போலீசில் புகார் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிக்கும் போலீசாருக்கும் உத்தரவிட்டு உள்ளனர். ஆனால் அவ்வாறு புகார் செய்யாமல் அந்த பள்ளி நிர்வாகம் அதனை மூடி மறைக்க முயல்வதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் மாவட்ட பள்ளி கல்வி அதிகாரிகளுக்கும் அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி நூலக பொறுப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பள்ளியில் படித்த மாணவி ஒருவர் பள்ளி வேனில் வந்து சென்று உள்ளார். அந்த மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போதும் பிரச்சினை மூடி மறைக்கப்பட்டு உள்ளது.

எனவே தற்போது எழுந்து உள்ள பிரச்சினையிலாவது போலீசார் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். மாவட்ட குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் தற்பொழுது ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • pa ranjith in the discussion of directing palwankar baloo biopic பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்