எனக்காக பாட வேண்டும் ரிக்வஸ்ட் செய்த ஏ ஆர் ரஹ்மான்; ஒத்துக் கொண்ட மைக்கேல் ஜாக்சன்; பரவும் வீடியோ,..

Author: Sudha
11 July 2024, 11:25 am

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர். ஏ ஆர் ரகுமான் x தளத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார்.அந்த பதிவு இப்போது ரசிகர்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது

அதில் 2009 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் பொழுது ஏஜென்ட் ஒருவரிடம் பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் அவர்களை சந்திக்க முடியுமா? என கேட்டிருந்தேன்.

இது குறித்து மைக்கேல் ஜாக்சனிடம் கேட்டுவிட்டு மின்னஞ்சல் அனுப்புவதாக தெரிவித்தார்.நானும் அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டேன்.

ஆஸ்கார் விருதுக்காக ஸ்லம்டாக் மில்லியனர் படம் சென்றிருந்த இருந்த சமயத்தில் மீண்டும் எனக்கு மின்னஞ்சல் வந்தது, அதில் மைக்கேல் ஜாக்சன் என்னை சந்திக்க விரும்புவதாக குறிப்பிடப் பட்டிருந்தது. நான் இப்போது சந்திக்க விருப்பமில்லை ஒருவேளை ஆஸ்கார் விருதை வென்றால் நான் நிச்சயமாக மைக்கேல் ஜாக்சன் அவரை சந்திப்பேன் என பதில் அனுப்பினேன்.

ஆஸ்கார் வென்றதும் அடுத்த நாளே மைக்கேல் ஜாக்சன் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அவருடைய குழந்தைகளை எனக்கு அறிமுகம் செய்தார்.எங்கள் சந்திப்பு இரண்டு மணி நேரம் நீண்டது.

இந்தியா வந்த பிறகு எந்திரன் படத்திற்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தேன். மைக்கேல் ஜாக்சனை சந்தித்தது குறித்து இயக்குனர் சங்கரிடம் சொன்னேன். நீங்களும் மைக்கேல் ஜாக்சனும் எந்திரன் படத்தில் இணைந்து பாடலாமே என ஷங்கர் கேட்டிருந்தார்.இது குறித்து இரண்டு முறை மைக்கல் ஜாக்சனிடம் விவாதித்தேன்.

நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவதாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் பணியாற்ற தயார் என மைக்கேல் ஜாக்சன் சொன்னார்.ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். இந்த நிகழ்வை குறித்து சிலாகித்து ஏ ஆர் ரகுமான் பதிவிட்டிருந்தார்.இந்த பதிவு இப்போது ரசிகர்களிடம் டிரெண்ட் ஆகி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 154

    0

    0