கோவில் கும்பாபிஷேக விழாவில் 5 சவரன் தாலி திருட்டு : கதறி அழுத மூதாட்டி!

Author: Udayachandran RadhaKrishnan
11 July 2024, 12:10 pm

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாதம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, திருச்சுற்றுக் கலசநீராட்டு, ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் காலவேள்வி, பேரொளி வழிபாட்டுடன் பூர்ணாஹதி நடந்தது.

இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை யாகசாலையில் இருந்து சிவாச்சாரியர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் உச்சியில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினார்.பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வெளிச்சந்தையைச் சேர்ந்த மூதாட்டி விமலாவின் கழுத்தில் இருந்த 5-பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதனையறிந்த மூதாட்டி செய்வதறியாமல் கண்ணீர் விட்ட சம்பவம், கும்பாபிஷேக விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?