சீதாவை தப்பா பேசல.. குடும்பத்தில் மீண்டும் ஏற்பட்ட பூகம்பத்தால் பார்த்திபன் எமோஷனல்..!

Author: Vignesh
11 July 2024, 4:21 pm

சினிமாவில் ஏதோ படங்கள் எடுக்க வேண்டும் என்று இல்லாமல் வித்தியாசமாக இதுவரை யாரும் முயற்சி செய்யாத விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு பார்த்திபன் படங்களை எடுப்பவர். தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமமான இவர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தார். பின்னர் சில படங்களை இயக்கியும் படங்களில் நடித்தும் இருக்கிறார்.

Parthiban

இந்நிலையில், 1990 ஆம் ஆண்டு சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பார்த்திபனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

Parthiban

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பார்த்திபன் மனைவி குறித்தும் சொர்ணமுகி படத்தை குறித்தும் பேசிய விஷயத்தை சேனல் ஒன்றில் ஒன்றாக்கி செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்த சீதா தன்னுடைய மகளிடம் வருத்தப்பட்டாராம். பார்த்திபனின் மகள் பார்த்திபனுக்கு கால் செய்து என்னப்பா அம்மா பத்தி இப்படி தப்பா பேசி இருக்கீங்களா என்று கேட்க இல்லமா நான் ஏதும் பேசல நான் பேசுனது அவங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் சாரி சொல்லிரு என்று சாரி தெரிவித்துள்ளார்.

seetha - updatenews360

மேலும், நான் இரண்டு செய்தியில் பேசியதை ஒண்ணா போட்டுட்டாங்க அவ்வளவுதான் என்று தெரிவித்தாராம். நான் எப்போதுமே மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசி விடுவேன். இதனால், பல சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இப்போது, கூட இதுதான் எனக்கு வந்த சிக்கலாக இருக்கிறது என்று பார்த்திபன் தற்போது விளக்கமும் கொடுத்திருக்கிறார். அதோடு, தன்னுடைய முன்னாள் மனைவி குறித்தும் பேசி இருக்கிறார்.

seetha - updatenews360

அதில், நான் என்னுடைய பழைய காதல் அல்லது யாரையாவது பற்றி பேசினாலோ அவர்களது மனது புண்படக் கூடாது என்று பார்த்து பேசுவேன். ஆனால், எண்ணில் பாதியாக இருக்கும் இப்போதும் என்னுடைய குழந்தைகளின் அம்மாவாக இருப்பவரை நான் மனசு கஷ்டப்படுத்த வேண்டாம். ஆனால், சிலர் நாம் ஒன்று பேச வேறொன்றாக வெளியில் சொல்வதால் மனக்கசப்பு ஏற்பட்டு குடும்பங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது என்று பார்த்திபன் வருத்தத்துடன் பேசி இருந்தார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 202

    0

    0