என்னை அரசு கொலை செய்ய பார்த்தது.. காலையில் கைதாகி மாலையில் விடுவிக்கப்பட்ட சாட்டை துரைமுருகன் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2024, 10:57 am

நாம் தமிழர் கட்சி நிர்வாகியான சாட்டை துரைமுருகன். சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இதன் வாயிலாக தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி வருகிறார்.இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் ஆனது கடந்த எட்டாம் தேதி முடிவடைந்தது

அந்த இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பேசினார் அப்போது திமுக தலைவரை பற்றி முன்னாள் திமுக தலைவர் மறைந்த கருணாநிதி மற்றும் திமுக அரசை தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

அந்த வீடியோனது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில் திமுக ஐடிவிங் கை சேர்ந்தவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாட்டை சாட்டை துரைமுருகனை போலீசார் தேடி வந்த நிலையில் அவரது செல்போன் சிக்னலை வைத்து அவர் தென்காசியில் இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனை அடுத்து தென்காசி சென்ற போலீசார் திருநெல்வேலி வீராணம் பகுதியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த போது திருச்சி சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ஆனால், சாட்டை துரைமுருகனை திருச்சி நீதிமன்ற முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகன் நீதிமன்ற காவலில் செல்ல தேவையில்லை எனக் கூறி விடுவித்தனர்.

இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சாட்டை துரைமுருகன், என்னை அரசு கொலை செய்ய முயற்சிப்பதாகவும், கருணாநிதி குறித்த பாடல் நான் எழுதவில்லை, என்றோ அதிமுகவினர் எழுதிவிட்டனர் என கூறினார்.

  • first day collection of Ajith's Good Bad Ugly Movie தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?