மூன்றாவது முறையாக பேய்; மிரட்டும் ஹன்சிகா; வெளியான காந்தாரி டிரெய்லர்,..

Author: Sudha
12 July 2024, 1:27 pm

தமிழில் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை ஹன்சிகா.

தன்னுடைய அழகாலும் வெகுளித் தனமான நடிப்பாலும் தமிழ் ரசிகர்கள் விரும்பும் நடிகையாக மாறினார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி, பிரியாணி, சிங்கம் 2 என இவரது நடிப்பில் அடுத்தடுத்து ஹிட் படங்கள் வெளிவந்தது.

குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் அளவிற்கு புகழ் பெற்றார் ஹன்சிகா

சமீபத்தில் நடித்திருந்தார் சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 2 படத்தில் ஹன்சிகா பேயாக நடித்து மிரட்டி இருப்பார். இதனை படத்தை தொடர்ந்து கார்டியன் படத்திலும் பேயாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

2022 ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் அரண்மனையில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது காந்தாரி எனும் படத்தில் நடித்துள்ளார் ஹன்சிகா.

இந்த திரைப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார் படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது காந்தாரி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

காந்தாரி படம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் படம் கண்டிப்பாக மிரட்டும் தோரணையில் இருக்கும் என பேசி வருகிறார்கள்..

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 322

    0

    0