நலிந்த நடிகர்கள்; நிதியதவி செய்த யோகி பாபு; சமூக வலை தளங்களில் குவியும் பாராட்டு,..

Author: Sudha
12 July 2024, 5:07 pm

பாபு என இயற்பெயர் கொண்ட யோகி பாபு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை தொடரான “லொள்ளு சபா” தொடரில் சிறு வேடங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

அதன் பின்பு, ஆண்டவன் கட்டளை,கோலமாவு கோகிலா,மற்றும் பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார் யோகி பாபு.

2014 ஆம் ஆண்டு வெளியான மான் கராத்தே திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள “வௌவால்” கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

இது தவிர அரண்மனை, பேய் மாமா,கூர்க்கா போன்ற திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார் யோகி பாபு

நலிந்த நடிகர்களின் நலனுக்காக இவர் தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவரும், நடிகர் சங்க அறக்கட்டளையின் உறுப்பினருமான பூச்சி முருகனிடம் 6 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.

திரைப்பட முன்னணி நடிகர் யோகி பாபு இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

  • nazriya nazim fahadh open talk about why her absent in social media காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!